புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே நகரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் இளையராஜா. இவர் தண்ணீர் சுத்திகரிப்பு சாதனங்கள் அமைக்கும் வேலை செய்துவருகிறார். இவரின் மகள் சேதன்யாவுக்கு(6), கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஒன்றாம் வகுப்பு பயில இடம் கிடைத்தும், ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே ஆன்லைன் கல்வி பயில்கிறார்.
இந்நிலையில், மூன்று வயது முதலே பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளைப் பெற்ற சேதன்யா, 36 ஆங்கில விரிவாக்கங்களை 60 நொடிகளில் கூறி இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். அதுமட்டுமின்றி, மாநிலத்தின் தலைநகரம், மாவட்டங்களின் பெயரையும் சரளமாக கூறிவரும் சேதன்யாவை, அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: 'ஏது என்னிடமே பணம் கேட்கிறாயா...' ஓசியில் 'பப்ஸ்' தராததால் அடிதடியில் இறங்கிய போதை பாய்ஸ்!