புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கே.வி.எஸ். தெருவைச் சேர்ந்த ஸ்வேதா என்னும் சிறுமி, மழை பெய்து கொண்டிருக்கும்போது வீட்டின் மாடியில் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது மாடியின் அருகே உள்ள உயர் அழுத்த மின் கம்பியில் மின்கசிவு ஏற்பட்டு, சிறுமி மீது மின்சாரம் பாய்ந்தது. அதனால் சிறுமி சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார்.
அதேபோல, நம்பன்பட்டியைச் சேர்ந்த அஞ்சலி என்னும் சிறுமி வீட்டிலுள்ள எர்த் கம்பியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக படுகாயம் அடைந்தார். உடனே, சிறுமியை மீட்ட உறவினர்கள் ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சைப் பலனின்றி சிறுமி உயிரிழந்தார். தற்போது இரண்டு சிறுமிகளின் உடல்களும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு: உறவினர்கள் போராட்டம்