ETV Bharat / state

ஆண் குழந்தை மோகம்: பெற்ற மகளை நரபலி கொடுத்துவிட்டு நாடகமாடியவர் கைது! - pudukottai district news

புதுக்கோட்டை: கடந்த சில நாள்களுக்கு முன்பாக சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த 13 வயது சிறுமியை அவருடைய தந்தையே நரபலி கொடுத்திருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆண் குழந்தை மோகம்: பெற்ற மகளை நரபலி கொடுத்து விட்டு நாடகமாடிய தந்தை கைது!

author img

By

Published : Jun 2, 2020, 5:38 PM IST

பெண் குழந்தைகள் பிறந்தால் கள்ளிப்பால் கொடுக்கும் கொடூர சம்பவங்களையே இன்னும் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. இந்நிலையில், ஆண் குழந்தை மோகம் பல குற்ற செயல்களுக்கு இட்டுச் செல்கிறது.

புதுக்கோட்டை கந்தர்வகோட்டை அருகே தண்ணீர் எடுக்கச் சென்ற 13 வயது சிறுமி காட்டுப் பகுதிக்குள் இருந்த முள்புதரில் கழுத்தில் காயத்துடன் மயங்கிக் கிடந்தார். இதையடுத்து கந்தர்வகோட்டை காவல் துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சிறுமியை தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் சிசிச்சைப் பலனின்றி சிறுமி உயிரிழந்தார்.

தண்ணீர் எடுக்கச் சென்ற சிறுமி காட்டுப் பகுதியில் கழுத்து நெரிக்கப்பட்டு கிடந்த சம்பவம் அவரது பெற்றோருக்கு மட்டுமில்லாது ஊரையே அதிர்ச்சியில் உறையவைத்தது.

சிறுமியின் உறவினர்கள் சிறுமியின் மரணத்திற்கு நீதி கிடைப்பதற்காகச் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என உறுதியளித்தார்.

இதனையடுத்து, சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உள்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் உடற்கூறாய்வு முடிவுகளில் கழுத்தை நெரித்ததால் உயிரிழப்பு ஏற்பட்டதாகவே பதிவானது. இதையடுத்து சிறுமியின் மரணத்தில் மேலும் சில சந்தேக முடிச்சுகள் விழுந்தன. குழம்பிப்போயிருந்த காவல் துறையினருக்கு நேற்று ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது.

பெற்ற மகளை நரபலி கொடுத்து விட்டு நாடகமாடிய தந்தை கைது!

கொலையும் பின்னணியும்

சிறுமியின் தந்தை பன்னீர்செல்வத்திற்கு ஆண் குழந்தை மீது அதீத ஆசை இருந்துள்ளது. இதற்காக மந்திரவாதி ஒருவரிடம் ஆலோசனை கேட்க, அவர் பன்னீர்செல்வத்தின் பெண் குழந்தையைப் பலியிட ஆலோசனை வழங்கியுள்ளார்.

இந்த நரபலி, ஆண் குழந்தை பிறக்கும் சக்தியைப் பெருக்கும் எனக் கூறியுள்ளார். இதனை நம்பிய பன்னீர்செல்வம் சிறுமி தண்ணீர் எடுக்கச் சென்றதைப் பயன்படுத்திக் கொண்டார். இந்த ஆண் குழந்தை மோகம் பன்னீர்செல்வத்தை பெற்ற மகளையே கொலைசெய்ய தூண்டியுள்ளது.

இதையடுத்து பன்னீர்செல்வம் தண்ணீர் எடுக்கச் சென்ற சிறுமியை பின்தொடர்ந்து சென்றார். யாருமில்லா சமயம் பார்த்து தன் மகளின் கழுத்தை நெரித்துள்ளார்.

பின்னர் மறைத்துவைத்திருந்த ஆயுதத்தைக் கொண்டு கழுத்தை அறுத்து கொலைசெய்துவிட்டு, ஏதும் அறியாதது போல உறவினர்களுடன் சிறுமியைத் தேடியுள்ளார்.

இந்தத் தகவல்கள் காவல் துறையின் முதற்கட்ட விசாரணையில் வெளிவந்துள்ளன. இதில் தொடர்புடைய மந்திரவாதியை காவல் துறையினர் தேடிவருகின்றனர். மேலும் இதில் உடந்தையான நபர்களைக் குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

இதையும் படிங்க: மகளை கர்ப்பமாக்கிய தந்தை போக்சோ சட்டத்தில் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.