பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் ரஞ்சன்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் துரைசாமி. இவரின் மகன் அருள்செல்வன் (27) ஆட்டோ ஓட்டுநராகப் பணியாற்றிவருகிறார். இதனிடையே கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு அருள்செல்வன் பைக்கில் செல்லும்போது, அரசுப் பேருந்து மோதிய விபத்தில் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக மங்களமேடு காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இந்த வழக்கானது பெரம்பலூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.
நீதிமன்றம் தனுடைய வழக்கை சீக்கிரம் முடித்து தீர்ப்பளிக்க வேண்டும் என்று கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
இந்நிலையில், பலமுறை மனு அளித்தும் மாவட்ட நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் விரக்தியில் திங்கள்கிழமை மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்ப்பு கூட்டம் நடக்கும்போது மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது, பாதுகாப்புப் பணியிலிருந்த காவலர்கள் உடனடியாக அவரை தடுத்துநிறுத்திக் காப்பாற்றினர். தற்போது அருள்செல்வனிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: பள்ளிப் பேருந்தும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து: 10 பேர் காயம்