பெரம்பலூர் மாவட்டம் புது வேலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கநாதன் (50). இவர் ஆலத்தூர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டின் துக்க நிகழ்விற்கு சென்று விட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது, திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சாலையை கடக்கும் போது, சென்னையிலிருந்து திருச்சி நோக்கி வந்த கனரக வாகனம் ஒன்று இவரது இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், ரங்கநாதன் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாடாலூர் காவல்துறையினர், ரெங்கநாதன் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தண்ணீர் லாரி மோதி சிறுவன் பலி: சிசிடிவி வெளியீடு