ETV Bharat / state

எங்களுக்கு மேல்நிலைப்பள்ளி அமைத்து தர வேண்டும் - நரிக்குறவ இன மக்கள் - higher secondary school

பெரம்பலூர்: நரிக்குறவ மாணவ மாணவிகளின் கல்வி மேம்பாடு அடைய மேல்நிலைப்பள்ளி தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நரிக்குறவ இன மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

எங்களுக்கு பள்ளிகள் அமைத்து தர வேண்டும் - நரிக்குறவ இன மக்கள்
author img

By

Published : Jul 5, 2019, 1:56 PM IST

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம் மலையப்ப நகர் பகுதியில் நரிக்குறவ குடும்பங்களும், கழைக்கூத்தாடி குடும்பங்களும் வசித்து வருகின்றன. இந்த கிரமாத்தில் உள்ள மாணவ மாணவிகள் படிப்பதற்காக ராமலிங்கம் கல்வி அறக்கட்டளை சார்பில், 1996 ஆம் ஆண்டு மத்திய அரசின் நிதி உதவியோடு பள்ளி தொடங்கப்பட்டது.

தமிழ்நாடு நரிக்குறவர் கூட்டமைப்பின் தலைவர் சுப்பிரமணியன் என்பவரின் தலைமையின் கீழ் இந்த பள்ளி நடத்தப்பட்டு வருகிறது. இங்கு, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவர், கழைக்கூத்தாடி, மட்டுமின்றி சேலம் ஆத்தூர் இறையூர் பகுதியில் உள்ள நரிக்குறவ குடும்பங்களின் குழந்தைகளும் படித்து வருகின்றனர். இதனிடையே ஒரு சிறிய கட்டடத்தில் இயங்கி வந்த இந்த பள்ளி, ஒரு தனியார் அமைப்பு மூலம் தத்தெடுக்கப்பட்டு புதிய கட்டடங்கள் அமைக்கப்பட்டு தற்போது செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், இங்குள்ள மாணவர்கள் 9 ,12ஆம் வகுப்பு படிப்பதற்கு ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள காரை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு செல்ல வேண்டிய நிலைவுள்ளது. மேலும் அந்த மேல்நிலைப்பள்ளிக்கு செல்வதற்கு அரசு சார்பில் வந்த பேருந்தும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள் ஐந்து கிலோ மீட்டார் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை எற்றப்பட்டுள்ளது.

எங்களுக்கு மேல்நிலைப்பள்ளி அமைத்து தர வேண்டும் - நரிக்குறவ இன மக்கள்

இதைக் கருத்தில் கொண்டு மலையப்ப நகர் மாணவர்கள் பயன் பெறும் வகையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மேல்நிலைப் பள்ளி தொடங்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

நரிக்குறவ இன மக்கள், எம்பிசி பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதால், கல்வியில் சிறந்து விளங்கினாலும் எந்த ஒரு அரசு நலத்திட்டங்கள் எங்களுக்கு வருவதில்லை எனவும், எஸ்டி பிரிவில் ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும் எனவும் மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Intro:நரிக்குறவ மாணவ மாணவிகளின் கல்வி மேம்பாடு அடைய மேல்நிலைப்பள்ளி தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நரிக்குறவ இன மக்கள் கோரிக்கை


Body:பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் மலையப்ப நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவ குடும்பங்களும் கழைக்கூத்தாடி குடும்பங்களும் வசித்து வருகின்றனர் இந்த கிராமத்தில் உள்ள நரிக்குறவர் மாணவ மாணவிகளின் கல்வி அறிவிக்கும் வகையில் ராமலிங்கம் கல்வி அறக்கட்டளை சார்பில் 1996 ஆம் ஆண்டு மத்திய அரசின் நிதி உதவியோடு உண்டு உறைவிட பள்ளி தொடங்கப்பட்டது இந்த ஊர் உண்டு உறைவிடப் பள்ளியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவர் மற்றும் கழைக்கூத்தாடி மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர் இதனிடையே ஒரு சிறிய கட்டிடத்தில் இயங்கி வந்த இந்த பள்ளி ஒரு தனியார் அமைப்பு மூலம் தத்தெடுக்கப்பட்டு புதிய கட்டணங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது இந்த பள்ளியை தமிழ்நாடு நரிக்குறவர் கூட்டமைப்பின் தலைவர் சுப்பிரமணியன் என்பவரின் தலைமையின் கீழ் நடத்தப்பட்டு வருகிறது மேலும் இந்த பள்ளியில் படித்த மாணவ மாணவிகள் 30-க்கும் மேற்பட்டோர் தற்போது பட்டதாரி மாணவர்களாக இருந்து வருகின்றனர் முதல் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே இந்த உண்டு உறைவிட பள்ளி மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர் இந்த உண்டு உறைவிடப் பள்ளியில் மலையப்ப நகர் மட்டுமின்றி சேலம் ஆத்தூர் இறையூர் பகுதியில் உள்ள நரிக்குறவ குடும்பங்களின் பிள்ளைகளும் தங்கி படித்து வருகின்றனர் அவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் இந்த பள்ளியில் செயல்பட்டு வருகிறது செய்து தருகின்றனர் இதனிடையே 9 மற்றும் 12ஆம் வகுப்பு வரை படிப்பதற்கு வசதி இல்லாத காரணத்தினால் இந்த மலையப்ப நகர் பகுதியில் இருந்து அருகில் உள்ள ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள காரை அரசு மேல்நிலைப்பள்ளி தான் மேல்நிலைப் பள்ளிக்கு செல்ல வேண்டியதாக உள்ளது மேலும் அந்த மேல்நிலைப்பள்ளிக்கு ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு எந்த ஒரு பேருந்து வசதியும் இல்லை அரசு சார்பில் வந்த பேருந்தும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதால் மாணவ மாணவிகள் மலையப்ப நகர் பகுதியில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்கின்றனர் மேலும் தற்போது இந்த கல்வியாண்டில் 19 மாணவ மாணவிகள் மலையப்ப நகர் நரிக்குறவர் மாணவமணிகள் காரை அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வருகின்றனர் இதனிடையே தங்கள் நான் மலையப்ப நகர் பகுதியிலேயே 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவ மாணவிகள் பயிலும் மேல்நிலைப் பள்ளி தொடங்க வேண்டும் எனவும் இப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர் நடந்த சட்டமன்ற கல்வி மானியக் கோரிக்கையில் மலையப்ப நகர் உண்டு உறைவிட பள்ளிக்கு அரசு அனுமதி கொடுத்த புகார் கொடுக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது மேலும் தாங்கள் கல்வியில் சிறந்து விளங்கினாலும் எந்த ஒரு அரசு நலத்திட்டங்கள் வராதவாறு தங்களுக்கு எஸ் டி பிரிவில் ஜாதி சான்றிதழ் பெற வேண்டும் எனவும் மற்ற மாநிலங்களில் எஸ் டி பிரிவு நரிக்குறவ இன மக்களுக்கு எஸ் டி பிரிவு வழங்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாட்டில் மட்டுமே எம் பி சி பிரிவில் உள்ளதால் எந்த ஒரு நலத்திட்டங்களும் பெற முடியாமலும் கல்வி மேம்பாடு அடைய முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாக உள்ளதாக நிறுவனம் மக்கள் தெரிவிக்கின்றனர்


Conclusion:மேலும் முதல்தர கல்வி பெறும் இந்த மாணவ மாணவிகள் எதிர்காலத்தில் சிறந்து விளங்க வேண்டுமெனில் தங்கள் ஊரிலேயே மேல்நிலைப் பள்ளி தொடங்க வேண்டும் எனவும் தங்களுடைய பிரிவினரை எஸ் டி பிரிவில் சேர்க்க வேண்டும் எனவும் மத்திய மாநில அரசுகளுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர் பேட்டி காரை சுப்பிரமணியன் ராமலிங்கம் கல்வி அறக்கட்டளை மலையப்ப நகர் பெரம்பலூர்

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.