ETV Bharat / state

வாட்டி வதைக்கும் வெயில்; தர்பூசணி விற்பனை ஜோர்!

பெரம்பலூர்: அக்னி நட்சத்திரம் வெயில் தொடங்கியுள்ளதால் தர்பூசணி பழத்தின் விற்பனை சூடு பிடித்துள்ளது.

மக்களிடம் அதிகம் விற்பனையாகும் தர்பூசணி
author img

By

Published : May 5, 2019, 3:18 AM IST

இந்த ஆண்டு தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனிடையே கத்தரி வெயில் என்று சொல்லப்படுகின்ற அக்னி வெயில் நேற்று தொடங்கியுள்ளது. அதனால், பொதுமக்கள் குளிர்ச்சியை தரும் இளநீர், தர்பூசணி, நொங்கு உள்ளிட்டவற்றை விரும்பி சாப்பிட்டு வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவிற்கு வெயில் இருந்து வருகிறது.
வேலைக்கு செல்வோர் பெரும் சிரமத்தோடு இருசக்கர வாகனத்தில் செல்கின்றனர். கத்திரியை சமாளிக்க நீர்சத்து மிகுந்த பழமான தர்பூசணி பழத்தை மக்கள் அதிகமாக உண்டு வருகின்றனர். மக்களின் தேவை அதிகமாக இருப்பதால், பெரம்பலூர் மாவட்டத்தில் தர்பூசணி பழங்களின் வரத்து அதிகரித்துள்ளது. தர்பூசணி ஒரு கிலோ ரூபாய் 15 முதல் 30 வரையும் விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து வியாபாரி கூறுகையில், "இந்த மாதத்தில் முலாம் பழம், இளநீர் மற்றும் தர்பூசணி வரத்து அதிகரித்துள்ளது. அதற்கேற்ப முலாம் பழம், இளநீர், தர்பூசணி ஆகியவற்றை பொதுமக்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர். அதனால் இவைகளின் விற்பனை அதிகமாக உள்ளது" என்றார்.

Intro:வாட்டிவதைக்கும் அக்னி வெயில் இன்று தொடங்கியது பெரம்பலூர் மாவட்டத்தில் தர்பூசணி பழங்கள் விற்பனை அதிகரிப்பு

Body:தமிழகத்தில் இந்த ஆண்டு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு கடுமையான வெயிலில் வாட்டி வதைத்து வந்தது இதனிடையே கத்தரி வெயில் என்று சொல்லப்படுகின்ற அக்னி வெயில் இன்று தொடங்கியது பெரம்பலூர் மாவட்டத்தை பொருத்தவரையில் அக்னி வெயில் முன்பாகவே கடந்த 10 நாட்களுக்கும் மேலாக 100 டிகிரி அழகிற்கு வெயில் வாட்டி வதைத்தது இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர் இதனிடையே அக்னி வெயில் இன்று தொடங்கிய நிலையில் வேலைக்கு செல்வோர் இருசக்கர வாகனத்தில் செல்வோர் பெரும் அவதிக்கு உள்ளாகினர் மேலும் அக்னி வெயிலை சமாளிக்க நீர்சத்து மிகுந்த பழங்களான தர்பூசணி பழங்களை நாடுகின்றனர் பெரம்பலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு தர்பூசணி பழங்களின் வரத்து அதிகரித்துள்ளது பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் புதிய பேருந்து நிலையம் சங்கு பேட்டை 4 ரோடு மூன்று ரோடு வெங்கடேசபுரம் செஞ்சேரி துறையூர் சாலை ஆத்தூர் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தர்ப்பூசணி வரத்து அதிகரித்துள்ளது

Conclusion:தர்பூசணி ஒரு கிலோ ரூபாய் 15 முதல் 30 வரையும் விற்பனை செய்யப்படுகிறது பெரம்பலூர் மாவட்டம் மேலப்புலியூர் அன்னமங்கலம் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து தர்ப்பூசணி பழங்கள் கொண்டு வரப்பட்டு இங்கு விற்பனை செய்யப்படுகிறது வெயிலில் வெளியில் இருந்து சமாளிக்க பொதுமக்கள் தர்பூசணி பழங்களை நாடி வருகின்றனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.