பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. வாக்காளர் தினம் ஜனவரி 25ஆம் தேதி கடைபிடிக்கப்படவுள்ள நிலையில், அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற கருத்தை மையமாகக் கொண்டு பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் போட்டிகள் நடத்தப்பட்டன.
தேசிய வாக்காளர் தினம், வலிமையான மக்களாட்சிக்கு தேர்தல் கல்வியறிவு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், வாக்காளர் தாம் அளித்த வாக்கை உறுதி செய்யும் கருவி என பல்வேறு தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
கோலப் போட்டியில் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், பெரம்பலூர் வட்டாட்சியர் பாரதி வளவன் உள்ளிட்டோர் கோலப் போட்டிகளை பார்வையிட்டனர். இதே தலைப்புகளில் ஓவியப் போட்டியும் பேச்சுப் போட்டியும் நடத்தப்பட்டன.
இதையும் படிங்க: குடிக்க பணம் தர மறுத்ததால் தந்தையைக் கொன்ற மகன்