பெரம்பலூர் குன்னம் வட்டம் லப்பைக்குடிக்காட்டில் கடந்த 23ஆம் தேதி தமுமுக சார்பில் முத்தலாக், என்ஐஏ, காஷ்மீர் உள்ளிட்ட மக்கள் விரோத சட்டங்கள் என்ற தலைப்பில் தெருமுனை பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய தமுமுக திருச்சி மாவட்ட செயலாளர் முகமது ஷரீப், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்து பேசியுள்ளார். அவர் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதன் அடிப்படையில் முகமது ஷரீப்பை மங்களமேடு காவல் துறையினர் இன்று காலை கைது விசாரணை நடத்திவருகின்றனர்.