நாடு முழுவதும் இன்று விநாயகப் பெருமான் அவதரித்த நாளான விநாயகர் சதுர்த்தி வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் மக்கள் விநாயகருக்கு சிலைகள் வைத்தும், சிறப்பு பூஜைகள் செய்தும் ,படையல்கள் வைத்தும் வழிப்பட்டு வருகின்றனர் .
அதேபோல பெரம்பலூர் மாவட்டத்திலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் 5 அடி முதல் 10 அடி வரையிலான 200க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை வைத்து வழிப்பட்டனர். மேலும் மக்கள் தங்களது வீடுகளில் பூஜை செய்ய களிமண்ணால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலையை மிகுந்த ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பெரம்பலூர் பேருந்து நிலையத்தில் பழங்கள், பூக்கள் மற்றும் சிறிய வகையான விநாயகர் சிலைகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது.
![Ganesh chadurthi script visuval களிமண்ணால் செய்யப்பட்ட சிறு வகை விநாயகர் சிலைகள் அமோக விற்பனை பெரம்பலூர் மாவட்ட விநாயகர் சதுர்த்தி சிறப்பு வழிப்பாடு. ராஜ அழங்காரத்தில் விநாயகர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-pbl-01-ganesh-chadurthui-script-vis-7205953_02092019115655_0209f_1567405615_1006.jpg)