பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் சிறுகுடல் கிராமத்தில் நேற்று (டிச. 11) 5 பட்டியலின சிறுவர்களை அதே ஊரைச் சேர்ந்த வேறு சமூகத்தைச் சேர்ந்த நபர்கள் மலம் அல்ல வைத்ததாக சிறுகுடல் கிராமத்தில் பொதுமக்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மறியல் போராட்டம் நடத்தினர்.
மேலும் மலம் அள்ள வைத்த நபர்களை கைது செய்யக் கோரி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது இதனையடுத்து காவல் துறையினர் இச்சம்பவம் தொடர்பாக 3 பேரை கைது செய்தனர்.
இந்நிலையில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் சிறுகுடல் சம்பவம் தொடர்பாக மீதமுள்ள குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் மேலும் கைது செய்யப்பட்ட அனைவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 200க்கும் மேற்பட்டோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.