ETV Bharat / state

பெரம்பலூரில் ரிலையன்ஸ் நிறுவனத்தை முற்றுகையிட்ட விசிக! - விசிக ரிலையன்ஸ் போராட்டம்

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி ரிலையன்ஸ் நிறுவனத்தைச் சார்ந்த டிரெண்ட்ஸ் வணிக வளாகத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகையிட்டனர்.

vck caders protest infront of perambgalur reliance trents
பெரம்பலூரில் ரிலையன்ஸ் நிறுவனத்தை முற்றுகையிட்ட விசிகவினர்
author img

By

Published : Dec 16, 2020, 3:50 PM IST

பெரம்பலூர்: புதிய வேளாண் திருத்தச் சட்டங்களை கண்டித்து டெல்லியை விவசாயிகள் முற்றுகையிட்டு தொடர்ச்சியாக போராட்டம் நடத்திவருகின்றனர். மத்திய அரசு அம்பானி போன்ற பெரு நிறுவன முதலாளிகளுக்கு சாதகமாக செயல்படுவதாக கூறி அம்பானி, அதானி நிறுவனங்களின் பொருள்களைப் புறக்கணிக்கும் போராட்டத்தை டெல்லியில் போராடும் விவசாயிகள் முன்னெடுத்துள்ளனர்.

இந்த முன்னெடுப்புக்கு ஆதரவளித்து விசிகவினர், தமிழ்நாடு முழுவதும் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திவருகிறார்கள். அதன்படி, பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள ரிலையன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான டிரெண்ட்ஸ் வணிக வளாகத்தை பெரம்பலூர் விசிக மாவட்டச் செயலாளர் தமிழ் மாணிக்கம் தலைமையில் விசிகவினர் இன்று முற்றுகையிட்டனர்.

முற்றுகைப் போராட்டத்தின்போது, அம்பானி, அதானி போன்ற நிறுவனங்களின் பொருள்களை புறக்கணிப்போம் எனவும், அந்த கார்ப்பரேட் நிறுவனங்களை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் எனவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதையும் படிங்க: நாளை பெரம்பலூர் செல்லும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.