பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியம் மேற்பார்வை பொறியாளர் அலுவலக வளாகத்தில், கேங்மேன் பதவிக்கான உடற்தகுதி தேர்வு நடைபெற்றது.
இந்த தேர்வானது மேற்பார்வை பொறியாளர் கருப்பையா முன்னிலையில் நடைபெற்றது. இதற்காக அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 200 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அவர்களுக்கான உடல் தகுதித் தேர்வு நடைபெற்றது.
இன்று (டிச.9) முதல் டிசம்பர் 18ஆம் தேதி வரை ஒன்பது நாட்கள் இத்தேர்வு நடைபெறுகிறது. கம்பம் ஏறுதல் மற்றும் மூன்று பேஸ் கம்பியை பொருத்துதல், அலுமினிய மின் கடத்தியில் உலோக பாகங்களில் டிஸ்க் பொருத்துதல், மூன்று எண்ணிக்கை கொண்ட மூன்று அடி மின் கம்பியை 100 மீட்டர் தூரத்தை ஓடுதல் உள்ளிட்ட மூன்று நிலைகளாக உடற்தகுதி தேர்வு நடைபெற்றது.