ETV Bharat / state

உள்ளாட்சித் தேர்தல்: பெரம்பலூரில் அதிக இடங்களைக் கைப்பற்றிய திமுக

author img

By

Published : Jan 3, 2020, 7:12 AM IST

பெரம்பலூர்: உள்ளாட்சி மன்றத் தேர்தலில் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களை திமுக கைப்பற்றியுள்ளது

TN Local body polls: DMK winning the most seats in Perambalur
TN Local body polls: DMK winning the most seats in Perambalur

தமிழ்நாட்டில் உள்ளாட்சி மன்றத் தேர்தல் இரண்டு கட்டமாக டிசம்பர் 27, 30ஆம் தேதிகளில் நடைபெற்றது. அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் 27ஆம் தேதியும் வேப்பூர் ஒன்றியங்களிலும் டிசம்பர் 30ஆம் தேதியும் தேர்தல் நடைபெற்றது.

இந்நிலையில் வாக்குப்பதிவு செய்யப்பட்ட வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. பெரம்பலூர் ஒன்றியத்தில் பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் வேப்பந்தட்டையில் பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் உடும்பியம் ஈடன் கார்டன் மேல்நிலைப் பள்ளியிலும் வேப்பூர் ஒன்றியத்தில் பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் வேப்பூர் அரசு மகளிர் கல்லூரியிலும் எண்ணப்பட்டன.

ஒன்றியக் குழுவில் ஒன்றியம் வாரியாக திமுகவுக்கு ஒன்பது இடங்கள் கிடைத்துள்ளன. அதிமுக மூன்று இடங்களிலும் தேமுதிக, அமமுக தலா ஒரு இடத்திலும் வெற்றிபெற்றுள்ளன.

பெரம்பலூர் ஒன்றியத்தில் மொத்தமுள்ள 14 இடங்கள் முழுமையாக முடிவு அறிவிக்கப்பட்ட நிலையில், ஒன்பது இடங்களில் திமுக வெற்றிபெற்றுள்ளது.

ஆலத்தூர் ஒன்றியம்

ஆலத்தூர் ஒன்றியத்தை பொறுத்தமட்டில் திமுகவுக்கு ஐந்து இடங்களும் அதிமுகவுக்கு இரண்டு இடங்களும் கிடைத்துள்ளன. ஓரிடத்தில் தேமுதிக வெற்றிபெற்றுள்ளது. மீதமுள்ள இடங்களுக்கு வாக்குகள் எண்ணப்பட்டுவருகின்றன.

வேப்பந்தட்டை ஒன்றியம்

திமுக எட்டு இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. அதிமுக நான்கு இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. பாமக இரண்டு இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. மீதமுள்ள இடங்களுக்கு வாக்குகள் எண்ணப்பட்டுவருகின்றன.

வேப்பூர் ஒன்றியம்

திமுக ஆறு இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. அதிமுக இரண்டு இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் ஒரு இடத்திலும் பாட்டாளி மக்கள் கட்சி ஒரு இடத்திலும் சுயேச்சை ஒரு இடத்திலும் வெற்றிபெற்றுள்ளனர். மீதமுள்ள இடங்களுக்கு வாக்குகள் எண்ணப்பட்டுவருகின்றன.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஊராட்சியில் மொத்தமுள்ள எட்டு பதவிகளுக்கு இரண்டு உறுப்பினர் பதவிக்கு மட்டும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர் ஒன்றியம் வார்டு எண் ஐந்தில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் குன்னம் ராஜேந்திரன் வெற்றிபெற்றுள்ளார். வார்டு எண் ஆறில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தேவகி வீரமுத்து வெற்றிபெற்றுள்ளார். மீதமுள்ள ஆறு மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கான எண்ணிக்கை நடைபெற்றுவருகிறது.

பெரம்பலூர் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் காணொலி
பெரம்பலூர் ஒன்றியத்தில் மட்டும் அனைத்து வாக்குகள் எண்ணப்பட்டு உள்ளது. மீதமுள்ள மூன்று ஒன்றியங்களில் தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டுவருகின்றன.

Intro:உள்ளாட்சி மன்றத் தேர்தலில் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் திமுக கைப்பற்றி உள்ளது

Body:தமிழகத்தில் உள்ளாட்சி மன்ற தேர்தலில் டிசம்பர் 27 மற்றும் டிசம்பர் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது பெரம்பலூர் மாவட்டத்தில் டிசம்பர் 27-ஆம் தேதி பெரம்பலூர் மற்றும் வேப்பூர் ஒன்றியங்களிலும் டிசம்பர் 30-ஆம் தேதி வேப்பந்தட்டை ஆலத்தூர் ஒன்றியங்களிலும் நடைபெற்றது இந்நிலையில் வாக்குப் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது பெரம்பலூர் ஒன்றியத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் வேப்பந்தட்டை யில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் உடும்பியம் ஈடன் கார்டன் மேல்நிலைப் பள்ளியிலும் ஆலத்தூர் ஒன்றியத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் பாடல் ஒரு அரசு மேல்நிலைப் பள்ளியிலும் வேப்பூர் ஒன்றியத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வேப்பூர் அரசு மகளிர் கல்லூரியிலும் எண்ணப்பட்டு வருகிறது

ஒன்றியக் குழு உறுப்பினர் வெற்றி பெற்றவர்கள் ஒன்றியம் வாரியாக
பெரம்பலூர் ஒன்றியம்
ஒன்பது இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது
மூன்று இடங்களில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது
தேமுதிக ஒரு இடத்திலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது
பெரம்பலூர் ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 14 இடங்கள் முழுமையாக முடிவு அளிக்கப்பட்டுள்ளது இதில் ஒன்பது இடங்களில் கைப்பற்றி பெரம்பலூர் ஒன்றிய திமுக தன்வசம் படுத்தியது

ஆலத்தூர் ஒன்றியம்

ஐந்து இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது
இரண்டு இடங்களில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது
ஓரிடத்தில் தேமுதிக வெற்றி வெற்றிப்பெற்றுள்ளது மீதம் உள்ள இடங்களுக்கு வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது

வேப்பந்தட்டை ஒன்றியம்
திமுக 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது அதிமுக நான்கு இடங்களில் வெற்றி இடங்களில் வெற்றி பெற்றுள்ளது பாமக இரண்டு இடங்களில் வெற்றி பெற்றுள்ளது மீதம் உள்ள இடங்களுக்கு வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது

வேப்பூர் ஒன்றியம்
திமுக 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது அதிமுக இரண்டு இடங்களில் வெற்றி பெற்றுள்ளது விடுதலை சிறுத்தைகள் ஒரு இடத்திலும் பாட்டாளி மக்கள் கட்சி ஒரு இடத்திலும் சுயச்சை ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர மீதம் உள்ள இடங்களுக்கு வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது

Conclusion:பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி உறுப்பினர் மொத்தமுள்ள எட்டு பதவிகளுக்கு இரண்டு உறுப்பினர் பதவிக்கு மட்டும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது பெரம்பலூர் ஒன்றியம் வார்டுஎண் 5 போட்டியிட்ட திமுக வேட்பாளர் குண்ணம் ராஜேந்திரன் வெற்றிபெற்றுள்ளார் வார்டு என் ஆறில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தேவகி வீரமுத்து வெற்றி பெற்றுள்ளார் மீதமுள்ள 6 மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கான எண்ணிக்கை நடைபெற்று வருகிறது
பெரம்பலூர் ஒன்றியத்தில் மட்டும் அனைத்து வாக்குகள் எண்ணப்பட்டு உள்ளது மீதமுள்ள மூன்று ஒன்றியங்களில் தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.