ETV Bharat / state

பெண்ணிடம் நகைத் திருடிய இருவர் கைது!

பெரம்பலூர்: வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் நகையை திருடிய இருவரை காவல் துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

theft accuest arrest
theft accuest arrest
author img

By

Published : Oct 10, 2020, 7:47 AM IST

பெரம்பலூர் மாவட்டம் கல்பாடி கிராமம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் மல்லிகா. இவர் நேற்று(அக்.9) வீட்டில் தனியாக இருந்ததை அறிந்த அடையாளம் தெரியாத நபர்கள் மல்லிகாவை தாக்கிவிட்டு அவர் அணிந்திருந்த நகையை திருடிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து மல்லிகா கொடுத்த புகாரின் அடிப்படையில், மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், திருட்டில் ஈடுபட்டது திருச்சி மாவட்டம் சமயபுரம் பழைய மாரியம்மன் கோயில் தெருவில் வசிக்கும் கார்த்திக், அண்ணா நகரைச் சேர்ந்த சாந்தி என்பது தெரியவந்தது.

இதையடுத்து, இருவரையும் காவல் துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து 2 லட்சத்து 27 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள், 30 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் திருட்டில் ஈடுபட்ட இருவரையும் விரைந்து 24 மணி நேரத்திற்குள் கைது செய்த காவல் துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:

குடும்ப தகராறில் பயங்கரம்: மகளை விஷம் வைத்து கொன்ற தந்தை கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.