ETV Bharat / state

மாணவர்கள் நேர மேலாண்மையை கடைபிடிப்பது முக்கியம்: ஆளுநர்!

பெரம்பலூர்: மாணவ மாணவிகள் நேர மேலாண்மையை கடைப்பிடிப்பது மிக முக்கியம் என்று தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறியுள்ளார்.

ஆளுநர்
author img

By

Published : Jul 19, 2019, 7:09 PM IST

திருச்சி, சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிறுவாச்சூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ராமகிருஷ்ணன் கல்வி நிறுவனங்கள் சார்பில் ராமகிருஷ்ணா ஆன்மீக பண்பாட்டு மையம் திருப்பாவை திருவெம்பாவை கலாசார விழா நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கல்லூரி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள திருப்பாவை கட்டடத்தை திறந்து வைத்தும் கலாசார விழாவினை குத்துவிளக்கேற்றி தொடக்கியும் வைத்தார். மேலும் திருப்பாவை திருவெம்பாவை கலாசார போட்டியில் வெற்றி பெற்ற 64 மாணவிகளுக்கு விருதுகளை வழங்கி அவர்களை கௌரவித்தார்.

மாணவர்கள் நேர மேலாண்மையை கடைபிடிப்பது முக்கியம்

இதனையடுத்து விழாவில் பேசிய அவர், ”மாணவ, மாணவிகள் நேர மேலாண்மையை மிக முக்கியமாக கடைப்பிடிக்க வேண்டும். பிறருக்கு போதிக்கும்போது அந்த செயல்களை நாம் கடைபிடிக்க வேண்டும். மகாத்மா காந்தியை போன்று எளிமையான வாழ்க்கையை மேற்கொண்டு லட்சியத்தை நோக்கி செயல்பட வேண்டும். சிறந்த தலைமைப் பண்புடன் வளர வேண்டும். கடவுள் நம்பிக்கையுடன் விடாமுயற்சியும் வேண்டும். காலத்தை சரியாக திட்டமிட்டு செயல்படவேண்டும், காலம் விலை மதிப்பற்றது” என்றார்.

இவ்விழாவில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன், கல்வி நிறுவனங்களின் தலைவர் சிவசுப்ரமணியம், அரசு அலுவலர்கள், மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Intro:மாணவ மாணவிகள் நேர மேலாண்மையை கடைப்பிடிப்பது மிக முக்கியம் என்று பெரம்பலூரில் நடைபெற்ற திருப்பாவை திருவெம்பாவை கலாச்சார விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேச்சு

Body:பெரம்பலூர் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிறுவாச்சூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ராமகிருஷ்ணன் கல்வி நிறுவனங்கள் சார்பில் ராமகிருஷ்ணா ஆன்மீக பண்பாட்டு மையம் திருப்பாவை திருவெம்பாவை கலாச்சார விழா இன்று நடைபெற்றது இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் கல்லூரி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள திருப்பாவை கட்டிடத்தை திறந்து வைத்தும் கலாச்சார விழாவினை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார் மேலும் திருப்பாவை திருவெம்பாவை கலாச்சார போட்டியில் வெற்றி பெற்ற 64 மாணவிகளுக்கு விருதுகளை வழங்கி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் கௌரவித்தார் தொடர்ந்து விழாவில் பேசிய மாணவ மாணவிகள் நேர மேலாண்மையை அந்த முக்கியமாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வாழ்க்கையில் பிறருக்கு போதிக்கும் போது அந்த செயல்களை நாம் கடைபிடிக்க வேண்டுமென்று என்றும் மகாத்மா காந்தியை போன்று எளிமையான வாழ்க்கையை மேற்கொண்டு லட்சியத்தை நோக்கி செயல்பட வேண்டும் என்றும் சிறந்த தலைமைப் அன்புடன் வளர வேண்டும் என அறிவுறுத்தினார் மேலும் கடவுள் நம்பிக்கையுடன் விடாமுயற்சியும் வேண்டும் எனக் கூறிய ஆளுநர் காலத்தை சரியாக திட்டமிட்டு செயல்படவேண்டும் என்றும் காலம் விலை மதிப்பற்றது என்றும் தெரிவித்தார்

Conclusion:இந்த விழாவில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராமகிருஷ்ண கல்வி நிறுவனங்களின் தலைவர் சிவசுப்ரமணியம் மற்றும் அரசு அலுவலர்கள் மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.