அரியலூர் மாவட்டம், ரயில் நிலைய பகுதியில் வசிக்கும் நடராஜன் - உமா தம்பதியின், மகள் நிஷாந்தி. இவர் கடந்தாண்டு 12ஆம் வகுப்பில், 529.5 மதிப்பெண் பெற்று, மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவில் நீட் தேர்வையும் எழுதியுள்ளார்.
கடந்தாண்டு நடந்த நீட் தேர்வில் தோல்வியடைந்த அவர், இந்தாண்டு மீண்டும் நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். இந்நிலையில், நிஷாந்தி இன்று தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் விசாரணை நடத்திய போது, நிஷாந்தியின் அறையில் கடிதம் ஒன்று கிடைத்துள்ளது.
அதில், வேதியியல் மற்றும் உயிரியில் பாடங்கள் தனக்கு கடினமாக இருந்ததால் இந்த முடிவை எடுத்ததாகவும், தனது தந்தை வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்து இங்கேயே இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸில் 'மிஸ் யூ டாடி' எனவும் பதிவிட்டுள்ளார்.
நாடு முழுவதும், நீட் தேர்வு நாளை (ஜூலை 17) நடைபெற உள்ள நிலையில், அரியலூர் மாணவி தற்கொலை செய்து கொண்டது அப்பகுதிவாசிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஆன்லைன் ரம்மியால் பணம் இழப்பு: துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு காவலர் தற்கொலை