ETV Bharat / state

திருடிய மதுபாட்டில்களை மக்காச்சோள சக்கைக்கு நடுவே பதுக்கிய கும்பல் - 8 பேர் கைது

author img

By

Published : Apr 9, 2020, 7:12 PM IST

பெரம்பலூர்: டாஸ்மாக்கிலிருந்து திருடு போன மதுபான பெட்டிகளை மக்காச்சோள சக்கைகளுக்கு நடுவே பதுக்கி வைக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்த காவல் துறையினர், இது தொடர்பாக எட்டு பேரைக் கைது செய்துள்ளனர்.

ds
sd

கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருள்களை தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. மது பிரியர்களின் கூடாரமான டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில், பெரம்பலூரில் எளம்பலூர் சாலையில் உப்பு ஓடை அருகில் இயங்கும் அரசு டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து 20 பெட்டி மதுபாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், தீவிர விசாரணை நடத்தினர்.

tasmac
திருடிய மதுபாட்டில்களை மக்காச்சோள சக்கைக்கு நடுவே பதுக்கிய கும்பல்

பின்னர் மோப்ப நாய் மூலம் கிடைத்த தகவலின் பேரில், கோனேரிப்பாளையம் பகுதியில் வயலில் மக்காச்சோள சக்கைகளுக்கு நடுவே மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது காவல் துறையினருக்கு தெரிய வந்தது. இந்தத் திருட்டில் தொடர்புடைய டாஸ்மாக் கடை சூப்பர்வைசர் செல்வேந்திரன், விற்பனையாளர்கள் அழகுவேல், முத்துசாமி, சேட்டு, கருப்பையா, சிலம்பரசன், பிரவீன் குமார் உள்ளிட்ட எட்டு பேரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

இதையும் படிங்க: ’அனைவரும் தாரளமாக நன்கொடை வழங்குக’ - முதலமைச்சர் வேண்டுகோள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.