விவசாயத்தை முதன்மையாக கொண்ட பெரம்பலூர் மாவட்டத்தில் பருத்தி, மக்காச்சோளம், சின்னவெங்காயம் மற்றும் சிறு தானிய வகைகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றது.
கடந்த ஆண்டும், நடப்பு ஆண்டும் மக்காச்சோளம் பயிரிட்ட விவசாய நிலங்களில் படைப்புழு தாக்குதலினால் மிகுந்த நஷ்டம் ஏற்பட்டது. படைப்புழு தாக்குதல் எதிரொலியாக பெரம்பலூர் மாவட்டம், கவுல் பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் 2லிருந்து 3 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோள பயிர்களுக்கு ஹெலி ஸ்பிரேயர் (Heli Sprayer) மூலம் மருந்து தெளிக்கும் சோதனை முயற்சியை தமிழ்நாடு அரசு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் வேளாண்மைத் துறை சார்பில் செய்யப்பட்டது.
இந்த முறையில் விரைவாகவும் அதிகமான ஏக்கர் பரப்புள்ள விளை நிலங்கள் பயன்படுவதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.
நிகழ்வில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பேராசிரியர்கள், பெரம்பலூர் மாவட்ட வேளாண் அலுவலர்கள் மற்றும் வேளாண் பல்கலைக்கழக மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிக்க: 'ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா' - பின்னிப் பிணைந்த பாம்புகள்..!