தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக 2018-19ஆம் ஆண்டு தேசிய அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கம் பெற்ற விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு விளையாட்டு சீருடைகள் வாங்கிட ஊக்க உதவித் தொகையாக கீழ்காணும் விவரப்படி வழங்கப்படவுள்ளது.
அதன்படி, டிராக்சூட் _1, செட்டீ சர்ட் _2, சார் ட்ஸ்_2 வாம் அப் சூ மற்றும் சாக்ஸ் ஒரு செட் ஆகியவை அடங்கிய ஸ்போர்ட்ஸ் கட் ரூ. 6 ஆயிரமும், ட்ராக் சூட் 1, டி-ஷர்ட் 1, ஷார்ட்ஸ் 1, வாம் அப் சூ மற்றும் சாக்ஸ் ஆகியவை அடங்கிய ஸ்போர்ட்ஸ் கிட் ரூ. 4 ஆயிரமும், ராக் ஷூட் 1, வாம் அப்ஷூ மற்றும் சாக்ஸ் ஒரு செட் ஆகியவை அடங்கிய ஸ்போர்ட்ஸ் கிட் ரூ. 2,500 ஊக்கத் தொகையாக வழங்கப்படுகிறது.
மேலும் 2018 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 2019 மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் மாநில விளையாட்டு சங்கங்கள் மூலம் நடைபெற்ற தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்று தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கம் பெற்ற விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு மட்டும் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
இதில் இந்திய பள்ளி விளையாட்டுகள் கூட்டமைப்பு (SGFI) நடத்தும் போட்டிகளுக்கு வழங்கப்படமாட்டாது எனவும், தகுதியுள்ள வீரர், வீராங்கனைகளின் பெயர், முழு முகவரி மற்றும் சான்றிதழின் நகல் ஆகிய விவரங்களை மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் செப்டம்பர் 7ஆம் தேதிக்குள் நேரில் சமர்பித்து பயன்பெறலாம் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்
இதையும் படிங்க:ஹபீஸ், அலி அதிரடியால் தொடரை சமன் செய்த பாகிஸ்தான்!