பெரம்பலூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்திப்பெற்றது ஸ்ரீ தலையாட்டி சித்தர் கோயில். இங்கு உலக மக்கள் நலன் கருதியும், மழை பெய்ய வேண்டியும், விவசாயம் செழிக்கவும், இயற்கை சீற்றத்திலிருந்து மக்களைக் காக்கவும் 210 சித்தர்கள் மகா யாக வேள்வி நடத்தினர்.
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சித்தர்களும், பக்தர்களும் அபிஷேக பொருட்களையும், யாகம் வேள்வி பொருட்களையும் தலையில் வைத்து ஊர்வலமாக சித்தர் கோயிலுக்கு வந்தனர். இதனைத்தொடர்ந்து, கோமாதா பூஜையும், யாக பூஜையும் நடத்தினர்.
பின்னர் அருள்மிகு ஸ்ரீ தலையாட்டி சித்தர் பெருமானுக்கு சிறப்பு பூஜைகளும், மகா தீபாராதனையும் நடைபெற்றன. இறுதியில் பக்தர்களுக்கு வஸ்திர தானம், அன்னதானம் போன்றவையும் வழங்கப்பட்டன.