ETV Bharat / state

சிறப்பு பொருளாதார மண்டல விவகாரம் - நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்! - நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

பெரம்பலூர்: குன்னம் வட்டத்திற்குட்பபட்ட 3,000 ஏக்கர் நிலத்தில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதாகக் கூறி கையகப்படுத்தப்பட்ட நிலத்தை திருப்பித் தர வேண்டுமென நில உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

perambalur
author img

By

Published : Sep 30, 2019, 11:17 PM IST

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டத்திற்குட்பட்ட சில கிராமங்களை உள்ளடக்கிய சுமார் 3,000 ஏக்கர் விளைநிலங்கள் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைவதற்காக கடந்த 2007ஆம் ஆண்டு கையகப்படுத்தப்பட்டது.

ஆந்திராவின் ஜிவிகே குழுமம் இந்திய அரசின் பெருவணிக துறையும் இணைந்து விவசாயிகளிடமிருந்து நிலத்தை கையகப்படுத்தினர். மேலும், இந்த நிலத்தில் விமான உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைப்பதாகவும் ஐந்தாண்டுகளில் 50 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்குவதாகவும் கூறினர்.

இந்நிலையில், 13 ஆண்டுகளாகியும் சிறப்பு பொருளாதார மண்டலம் அமையவில்லை ஜிவிகே குழுமம் கொடுத்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. எனவே அப்பகுதி விவசாயிகள் தாங்கள் கொடுத்த நிலத்தில் மீண்டும் விவசாயம் செய்ய வேண்டுமென, இன்று திருமாந்துறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி வளாகத்தில் நில மீட்புப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

மேலும், அவர்கள் அளித்த விளை நிலங்களுக்குச் சென்று மண் வெட்டியும், கருவேல மரங்களை அகற்றியும் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர். இந்த போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாய சங்க கூட்டமைப்புகள், நிலம் கொடுத்த விவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:

நிலம் கையகப்படுத்துதல் சட்டம்: தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

Intro:பெரம்பலூர் சிறப்பு பொருளாதார மண்டலம் நில மீட்பு போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்

Body:பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டத்தில் உட்பட்ட திருமாந்துறை பெண்ணகொணம் அயன் பேரையூர் லைப்பை குடிகாடு உள்ளிட்ட கிராமங்களை உள்ளடக்கிய சுமார் 3000 ஏக்கர் விளைநிலங்கள் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைவதற்காக கடந்த 2007ஆம் ஆண்டு கையகப்படுத்தப்பட்டது ஆந்திராவின் ஜிவிகே குழுமம் இந்திய அரசின் பெருவணிக துறையும் இணைந்து விவசாயிகளிடமிருந்து நிலத்தை கையகப்படுத்தி னார் மேலும் இந்த நிலத்தில் விமானம் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைப்பதாக வும் மேலும் 5 ஆண்டுகளில் 50 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்குவதாகவும் கூறினர் மேலும் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைவதற்கு நிலம் கொடுத்த விவசாயிகள் வீட்டுக்கு ஒருவருக்கு வேலையும் வீட்டுமனைப்பட்டா வழங்குவதாகவும் கூறி நிறுத்தப்பட்டது இந்நிலையில் 13 ஆண்டுகள் ஆகியும் சிறப்பு பொருளாதார மண்டலம் அமையவில்லை ஜிவிகே குழுமம் கொடுத்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை மேலும் விவசாயிகள் தாங்கள் கொடுத்த நிலத்தில் மீண்டும் விவசாயம் செய்ய இன்று நில மீட்புப் போராட்டம் நடைபெற்றது திருமாந்துறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி வளாகத்தில் இருந்து புறப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் விளை நிலங்களில் சென்று மண் வெட்டியும் வெட்டியும் கருவேலம் முள் மரங்களை அகற்றும் நிலங்களை மீட்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர் மேலும் விவசாயிகளின் நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என கண்டன கோஷங்களை எழுப்பினர்

Conclusion:இந்த போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் விவசாய சங்க கூட்டமைப்புகள் நிலம் கொடுத்த விவசாயி அனைத்து கட்சிகள் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் பேட்டி சண்முகம் மாநில பொதுச் செயலாளர் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.