ETV Bharat / state

பெரம்பலூரில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல்! - பெரம்பலூர் அண்மைச் செய்திகள்

பெரம்பலூர்: பெரம்பலூர், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவு செய்யப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு தேர்தல் அலுவலர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.

பெரம்பலூரில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு ஆட்சியர் முன்னிலையில் சீல்

author img

By

Published : Apr 7, 2021, 4:35 PM IST

பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர், குன்னம் ஆகிய தொகுதிகளில் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தல் அலுவலர்கள் முன்னிலையில் பாதுகாப்பான இடங்களில் வைக்கப்பட்டது.

பெரம்பலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 428 வாக்குப்பதிவு மையங்களில் தேர்தல் நடைபெற்றது. இதனையடுத்து வாக்குப்பதிவு பதிவு செய்யப்பட்ட இயந்திரங்கள் குரும்பலூர் அரசு கலைக் கல்லூரியில் சார் ஆட்சியர் பத்மஜா, தேர்தல் பொது பார்வையாளர் மதுரிமா பரு வா சென், அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டன.

பெரம்பலூரில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு ஆட்சியர் முன்னிலையில் சீல்

குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் 388 வாக்குப்பதிவு மையங்களில் தேர்தல் நடைபெற்றது. இதனையடுத்து வாக்குப்பதிவு செய்யப்பட்ட இயந்திரங்கள் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா, தேர்தல் நடத்தும் அலுவலர் தேஜஸ் விநாயக், அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டன.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பெரம்பலூர், குன்னம் வாக்கு எண்ணும் மையத்திற்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : நன்றிக்குரியோரே! நல் உள்ளங்களே! நமக்கான பொறுப்பும் கடமையும் தொடர்கிறது! - மு.க.ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.