ETV Bharat / state

பெரம்பலூரில் ஏறு தழுவல் வீரனின் நடுகல் - perambalur district news

பெரம்பலூர் மாவட்டத்தின் எல்லையில் ஏறு தழுவல் வீரனின் நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூரில் ஏறு தழுவல் வீரனின் நடுகல்
பெரம்பலூரில் ஏறு தழுவல் வீரனின் நடுகல்
author img

By

Published : Jul 3, 2021, 4:59 PM IST

பெரம்பூர்: சங்ககாலம் தொட்டே தமிழரின் பண்பாட்டில் நடுகல் வழிபாட்டு முறை முக்கியப் பங்கு வகித்துவந்துள்ளது. மன்னர்களுக்கு இடையே ஏற்பட்ட போர், உயிர்நீத்த வீரர்களுக்கு நடுகல் நட்டு வழிபடும் முறை இருந்துள்ளது.

ஏறு தழுவல் வீரனின் நடுகல்

பெரம்பலூர்- துறையூர் நெடுஞ்சாலையில் உள்ள நாகலாபுரத்தில் தொல்லியல் தொடா்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆய்வின்போது, சாலையோரத்தில் நடுகல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஏறு தழுவல் நிகழ்ச்சியின்போது இறந்த வீரனுக்கு எடுக்கப்பட்ட நடுகல் இது. கணவன் இறந்தவுடன், மனைவியும் உடன்கட்டை ஏறியுள்ளதால், சதி கல்லாக உள்ளது. அதில், காளை கழுத்தில் கட்டப்பட்டுள்ள கயிற்றை, இரு வீரர்கள் பிடித்தபடி உள்ளனர். ஒரு வீரன், கொம்புகளை பிடித்தபடி காட்டப்பட்டுள்ளான். அவன் அருகே, ஒரு பெண், சிறுவன் காட்டப்பட்டுள்ளனர்.

நடுகல்
நடுகல்

சாலை விரிவாக்கப் பணி நடைபெறுவதால், இந்த நடுகல்லை இடமாற்றம் செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. விரைவில் மாற்றப்படும் என தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: வீட்டுக்கு அஸ்திவாரம் தோண்டிய போது 8 அடி உயரமுள்ள பெருமாள் கற்சிலை கண்டெடுப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.