ETV Bharat / state

பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா - அருள்மிகு அகிலாண்டேஸ்வரி உடனுறை பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயிலில்

பெரம்பலூர்: பெரம்பலூர் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி உடனுறை பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெற்றது.

பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா

author img

By

Published : Dec 28, 2020, 12:03 PM IST

பெரம்பலூர் அடுத்த திருப்பட்டூர் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி உடனுறை பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா நேற்று (டிச. 27) மிகச் சிறப்பாக நடைபெற்றது. சனீஸ்வர பகவான் நேற்று அதிகாலை தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குப் பெயர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து பெரம்பலூர் நகர்ப்புறப் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு அகிலாண்டேஸ்வரி உடனுறை பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா நடைபெற்றது.

அருள்மிகு அகிலாண்டேஸ்வரி உடனுறை பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயிலில்
அருள்மிகு அகிலாண்டேஸ்வரி உடனுறை பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்
இதில் விநாயகர் பூஜை, சங்கல்பம் உள்ளிட்டவற்றோடு யாக வேள்வி நடைபெற்றது. இந்த யாக வேள்வியில் பல்வேறு மூலிகை பொருள்கள் செலுத்தப்பட்டு மகா பூர்ணாஹூதியும், அதனையடுத்து சனீஸ்வர பகவானுக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட அபிஷேக பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது.
இந்தச் சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் கரோனா தொற்று பரவல் காரணமாகப் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.