ETV Bharat / state

பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் பெரியசாமி மலையில் சாமி சிலைகள் உடைப்பு - பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பிரசித்திப்பெற்ற சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் திருக்கோயிலுக்குச் சொந்தமான பெரியசாமி மலையில், சாமி சிலைகளை அடையாளம் தெரியாத நபர்கள் உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Sami idols smashed on Siruvachchur Periyasamy hill near Perambalur

author img

By

Published : Oct 6, 2021, 11:04 PM IST

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே உள்ளது சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் திருக்கோயில். சக்தி தலங்களில் மிகவும் பிரசித்திபெற்றது.
இத்திருத்தலம் திங்கள் மற்றும் வெள்ளி, அமாவாசை - பெளர்ணமி ஆகிய தினங்கள் மட்டுமே திறந்து இருக்கும்.
அதாவது திங்கள் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் அம்மன் திருக்கோயிலில் அருள் புரிவதாகவும், மற்ற நாட்களில் சிறுவாச்சூரை ஒட்டியுள்ள பெரியசாமி மலையில் பக்தர்களுக்கு அருள்புரிவதாகவும் பக்தர்கள் நம்புகின்றனர்.
இந்நிலையில் பெரியசாமி மலையில் 30 அடிக்கு மேல் உள்ள பெரியசாமி சிலை, செல்லியம்மன் சிலை, கன்னிமார்கள் உள்ளிட்ட நாட்டார் வழக்காற்றியல் தெய்வங்களின் சுடுமண் சிலைகள் உள்ளன.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு, புதியதாக சுடுமண் சிலைகள் அமைக்கப்பட்டு குடமுழுக்கு விழா நடத்தப்பட்டது.

சிறுவாச்சூர் பெரியசாமி மலையில் சாமி சிலைகள் உடைப்பு

இதனிடையே நேற்று இரவு அடையாளம் தெரியாத நபர்கள் அத்துமீறி, நுழைந்து பெரியசாமி மலையில் உள்ள செல்லியம்மன் மற்றும் பெரியசாமி சிலைகளை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்.
இதுகுறித்து கோயில் பூசாரிகள் மற்றும் பக்தர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த பெரம்பலூர் நகர காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் சாமி சிலைகள் உடைப்பு சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பலூர் மாவட்ட கோயில்களில் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகவே உள்ளது என்பது பக்தர்களின் புகாராக உள்ளது.
விரைந்து காவல் துறையினர் தக்க நடவடிக்கை எடுத்து சாமி சிலைகளை உடைத்த அடையாளம் தெரியாத நபர்களை கைது செய்ய வேண்டும் என்பது பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாகும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.