பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் 119 பயனாளிகளுக்கு 16 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தையல் மிஷின், சலவை இயந்திரம், சுய உதவி குழு பெண்களுக்கு நிதி உதவி உள்ளிட்ட நலத்திட்டங்களை மாவட்ட ஆட்சியர் சாந்தா வழங்கினார்.
இந்த நிகழ்வில் மாவட்ட சிறுபான்மை நல அலுவலர் உள்ளிட்ட பயனாளிகள் பலர் கலந்துகொண்டனர்.