நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூரில் நேற்றிரவு செல்ஃபோன் கடையில் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் கடையிலிருந்த 60 ஆயிரம் ரூபாயையும், 12 செல்ஃபோன்களையும் திருடிச் சென்றனர்.
இன்று காலை எதார்த்தமகாக கடைக்கு வந்த உரிமையாளர், கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கடையில் திருட்டு நடைபெற்றது தெரியவந்தது.
இதையடுத்து, இச்சம்பவம் குறித்து குன்னம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஊரடங்கை பயன்படுத்தி கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையை காட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: கரோனா சூழல்: சிசிடிவி கேமராவை உடைத்து திருட்டு!