பெரம்பலூர் மாவட்டம் அருகே உள்ள செஞ்சேரி கிராமத்தில் தேவேந்திர குல வேளாளர் மக்களின் நீண்டநாள் கோரிக்கையான தேவேந்திரகுலத்தான், மூப்பன் உள்ளிட்ட ஏழு உட்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று அரசாணை வெளியிட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடு பட்டனர்.
மேலும், பட்டியல் இன பிரிவில் இருந்து தேவேந்திரகுல வேளாளர் பிரிவை வெளியேற்றம் செய்யவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செஞ்சேரி கிராமத்தில் வீடுகளில் கறுப்பு கொடி கட்டியும், செஞ்சேரி பிரிவு சாலையில் கறுப்பு கொடி ஏந்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், கண்டன கோஷங்கள் எழுப்பியும் சுமார் 50 க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: 'மத்திய அரசின் அடிமையாக மாநில அரசு உள்ளது' - பிருந்தா காரத்