ETV Bharat / state

பணியிடமாறுதல் கோரி 3ஆவது நாளாக கர்ப்பிணி தொடர் போராட்டம்!

author img

By

Published : Sep 23, 2020, 4:04 PM IST

பெரம்பலூர்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியிடமாறுதல் கோரி மூன்றாவது நாளாக நிறைமாத கர்ப்பிணியான சத்துணவு அமைப்பாளர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்.

கர்ப்பிணி தொடர் போராட்டம்
கர்ப்பிணி தொடர் போராட்டம்

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் இருர் கிராமத்தைச் சேர்ந்தவர் சவிதா. இவர் அருகிலுள்ள சிறுகன்பூர் கிராமத்தில் உள்ள பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்துவருகிறார்.

இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதால் தனது சொந்த கிராமமான இருர் கிராமத்தில் சத்துணவு அமைப்பாளர் பணியிடம் காலியாக உள்ளதால் அப்பணியிடத்திற்கு மாறுதல் கோரி கடந்த இரண்டு நாட்களாக பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுவந்தார்.

நேற்று (செப்.22) அலுவலர்கள் எந்தவித பதிலும் அளிக்காமல் சென்றுவிட்டதால் இரவு வரை போராட்டத்தைத் தொடர்ந்தார்.

இந்நிலையில் இன்று காலை சவிதா மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்.

இவர் மூன்றாவது நாளாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் மாவட்ட நிர்வாகம் அவரது போராட்டத்திற்கு அனுமதி மறுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளே வராத அளவுக்கு தடுத்து நிறுத்தியுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.