ETV Bharat / state

வீட்டிலேயே அக்குபஞ்சர் முறையில் பிரசவம்: தாய்-சேய் உயிரிழப்பு

பெரம்பலூர்: அக்குபஞ்சர் முறையில் வீட்டிலேயே பிரசவம் பார்க்க முயற்சித்தபோது செவிலியர் பயிற்சி பெற்ற கர்ப்பிணி குழந்தையுடன் உயிரிழந்தார்.

தாய் சேய் பரிதாப உயிரிழப்பு
தாய் சேய் பரிதாப உயிரிழப்பு
author img

By

Published : Jan 11, 2021, 7:13 AM IST

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் பூலாம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயவர்மன். இவரது மனைவி அழகம்மாள். இவர் செவிலியர் பயிற்சி பெற்றவர்.

கர்ப்பிணியான இவருக்கு நேற்று இரவு கணவன் விஜய வர்மன் அக்குபஞ்சர் முறையில் வீட்டிலேயே பிரசவம் பார்த்தபோது குழந்தை பாதியளவு பிரசவித்த நிலையில், அழகம்மாள் அதிகமான உதிரப்போக்கு, மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டார்.

பின்னர், உயிருக்கு ஆபத்தான நிலையில் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையின்போது குழந்தையின் உடலானது அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. இதனையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அழகம்மாளுக்கு உயர் சிகிக்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

பெரம்பலூர் அரசு மருத்துவமனை
பெரம்பலூர் அரசு மருத்துவமனை

இதனிடையே திருச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலை உடற்கூறு ஆய்வு செய்யாமல் சடலத்தை ஒப்படைக்க வேண்டும் என விஜயவர்மன் உள்ளிட்ட குடும்பத்தார் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.