பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 282 நியாயவிலை கடைகளில் 1 லட்சத்து 77 ஆயிரத்து 25 குடும்ப அட்டைதாரர்களுக்கு வரும் 9ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை பொங்கல் பரிசு வழங்க மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு முதற்கட்டமாக துறைமங்கலம் பகுதியில் உள்ள நூறு அட்டைதாரர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தா தலைமையில் பொங்கல் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் வளர்மதி, பரிசுகள் வழங்கும் விழாவை தொடங்கி வைத்தார். அதில், ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்துடன் ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை அவற்றுடன் முந்திரி, திராட்சை, ஏலக்காய், கரும்பு ஆகியவை வழங்கப்பட்டது. இதில், குன்னம் சட்டப்பேரவை உறுப்பினர் ராமச்சந்திரன், பெரம்பலூர் சட்டப்பேரவை உறுப்பினர் தமிழ்ச்செல்வன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: பொங்கல் பரிசு தொகுப்பு - ஜன.10ஆம் தேதி ரேஷன் கடைகள் செயல்படும்!