கரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் சில தளர்வுகளுடன் நான்காம் கட்ட ஊரடங்கு வருகிற மே 31ஆம் தேதிவரை அமலில் உள்ளது.
இதனிடையே பெரம்பலூரில் ஊரடங்கு முடியும்வரை, பொதுமக்களுக்கு இலவச உணவு வழங்க உதவும் வகையில், அதிமுக பெரம்பலூர் மாவட்டச் செயலாளரும், குன்னம் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.டி. ராமச்சந்திரன் தன் சொந்த நிதியிலிருந்து இரண்டு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார். இந்நிகழ்வின்போது அதிமுக நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.
இதற்கான காசோலையை, நகராட்சி ஆணையர் குமரி மன்னனிடம் அவர் வழங்கினார். தொடர்ந்து அம்மா உணவகங்களில் வழங்கப்பட்டுவரும் உணவின் தரத்தையும் அவர் ஆய்வு செய்தார்.
ஊரடங்கு தொடங்கியதிலிருந்து இதுவரை அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்குவதற்காக ஆர்.டி. ராமச்சந்திரன் மூன்று முறை நிதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : தங்கம் வாங்கி தருவதாக மோசடி - பணத்தை இழந்த நபர் கைது!