பெரம்பலூர் மாவட்டம் வெங்கடேசபுரம் பகுதியிலுள்ள தனியார் பள்ளி சார்பாக வாசிப்புத்திறனை மேம்படுத்துவதற்காக விழிப்புணர்வுப் பேரணி இன்று நடைபெற்றது.
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை முன்பு தொடங்கிய இப்பேரணியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மதிவாணன் கொடியசைத்து தொடங்கிவைத்தார், இப்பேரணி பழைய பேருந்து நிலையம், காமராஜர் வளைவு, சங்குப்பேட்டை, வெங்கடேசபுரம் வழியாக புதிய பேருந்து நிலையத்தில் முடிவுற்றது.
பேரணியில் கலந்துகொண்ட பள்ளி மாணவ மாணவிகள் வாசிப்புத்திறன் அவசியம், படிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியும், 'புத்தகம் வாசிப்போம் புது உலகம் படைப்போம்' என்ற விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பியவாறும் சென்றனர்.
இப்பேரணியில் பள்ளி தாளாளர் ரவிச்சந்திரன், 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: சுவாமி விவேகானந்தரின் 150ஆவது ஜெயந்தியை முன்னிட்டு பேரணி