கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் முடி திருத்தும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முடி திருத்தும் தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், “ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள தங்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும். அல்லது தாங்கள் பணிபுரிய கூடுதல் நேரம் ஒதுக்கிட வேண்டும்” எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: வருவாய் இழந்த தொழிலாளர்களுக்கு ரூ.370 கோடி மதிப்பில் நிவாரணம்!