ETV Bharat / state

குடிநீர் குழாய் இணைப்புப் பெறுவதில் இவ்வளவு தாமதமா? தடையா? - சிறப்புக்கட்டுரை - perambalur

பெரம்பலூர்: நகர்ப்புறப் பகுதி மற்றும் மாவட்டத்தில் புதிய குழாய் இணைப்புப் பெறுவதில் ஏற்படும் தடைகள் குறித்து விவரிக்கிறது, இந்த சிறப்புக்கட்டுரை...!

குடிநீர் குழாய் இணைப்பு பெறுவதில் இவ்வளவு தாமதமா? தடையா? விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு

author img

By

Published : Oct 25, 2020, 5:43 PM IST

பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர், வேப்பந்தட்டை, வேப்பூர், ஆலத்தூர் என நான்கு ஒன்றியங்களைக் கொண்டுள்ளது. இதில் பெரம்பலூர் நகராட்சியைப் பொறுத்தவரையில் 21 வார்டுகளை உள்ளடக்கியதாகும். இந்நிலையில் மக்களின் அடிப்படை அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றாக உள்ளது, குடிநீர். பெரம்பலூரின் சில பகுதிகளில் மக்களின் தேவை பூர்த்தி செய்யப்பட்டும்; பல பகுதிகளில் குடிநீர் வசதி இல்லாமலும் உள்ளது. கோடைகாலங்களில் குடிநீர் பிரச்னை பெரிதும் பரவலாக மாவட்டம் முழுவதும் காணப்படுகிறது.

இதனிடையே குடிநீர் குழாய் இணைப்புகள் பெறுவதில் நுகர்வோர் சந்திக்கக்கூடிய தடைகள் குறித்து விளக்குகிறது, இந்த சிறப்புக்கட்டுரை.

பெரம்பலூர் நகராட்சியில், குடிநீர் இணைப்புகள் பெறுவது குறித்து நகராட்சி ஆணையாளர் குமரி மன்னனிடம் கேட்கையில், 'பெரம்பலூர் நகராட்சி ஆனது 21 வார்டுகளை கொண்டுள்ளதாகும். இதுவரை 8 ஆயிரத்து 946 குழாய் இணைப்புகள் உள்ளன. இதில் 11 ஆயிரத்து 553 பாதாள சாக்கடை இணைப்புகள் உள்ளன. அதுமட்டுமின்றி, புதியதாய் குழாய் இணைப்பு எந்தெந்தப் பகுதிகளில் இல்லை என்பதை அறிந்தும், குடிநீர் குழாய் இணைப்புகள் பெறாமல் உள்ள ஏழை மக்களைக் கண்டறிந்தும் அனைத்துப் பகுதிகளுக்கு குடிநீர் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த 2018ஆம் ஆண்டு முதல் 6,800 புதிய இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

குமரி மன்னன், பெரம்பலூர் நகராட்சி ஆணையாளர்

மேலும் நகராட்சிப் பகுதிகளில் நகராட்சி அனுமதியின்றி 237 குடிநீர் குழாய் இணைப்புகள் கண்டறியப்பட்டுள்ளது. பின்னர் அந்தந்த இணைப்புகளை வைத்திருந்தவர்கள் மீது சட்ட விதிகளுக்கு உட்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, அனைவருக்கும் குடிநீர் இணைப்பு வழங்குவதற்கு முறைப்படுத்தி நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது' எனத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே புதிய குடிநீர் குழாய் இணைப்பு பெறுவதில் நடைமுறை சிக்கல் குறித்து நகரவாசி சந்திரமவுலி கூறுகையில், 'பெரம்பலூர் மாவட்டம் வளர்ந்து வரும் மாவட்டமாக உள்ளது. அதனால், தற்போது அனைத்துத் துறைகளிலும் பெரம்பலூர் மாவட்டம் வளர்ந்து வருகிறது. இதில் நகராட்சியின் அடிப்படை விஷயமாக இருப்பது குடிதண்ணீர். ஆரம்ப காலத்தில் பெரம்பலூர் மாவட்டம், வறண்ட மாவட்டமாக இருந்தது. இந்நிலையில் மக்களின் அடிப்படையான குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யக் கூடியது, காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம். இது பெரம்பலூர் மாவட்டத்தின் வரப்பிரசாதமாக உள்ளது.

சந்திரமவுலி, குடியிருப்புவாசி

இருந்தபோதிலும், இந்த காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் போன்ற புதிய குடிநீர் குழாய் இணைப்புப் பெறுவதில், புதியதாக வீடு கட்டுபவர்களுக்குப் பல சிக்கல்கள் எழுகின்றன. பொதுவாக ஒரு வீட்டுமனை குடியிருப்பில், இறுதிப்பகுதியில் வீடு கட்டுபவர், குடிநீர் இணைப்புப் பெறுவதில் சிக்கல்களைச் சந்திக்கின்றனர். மேலும், குழாய் பதிக்கக்கூடிய செலவு நுகர்வோரின் சுமையாக உள்ளது.

மேலும் நகராட்சி விதிமுறைகளைப் பின்பற்றி பல்வேறு வரிகள் செலுத்தினாலும், குடிநீர் குழாய் இணைப்புப் பெறுவதில் நுகர்வோருக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படுகிறது. ஒரு வீட்டு மனைப் பிரிவில் யாரும் குடிநீர் இணைப்புப் பெறவில்லை என்றால் புதியதாய் குடிநீர் இணைப்பை பெற இன்னும் அதிகமாக செலவாகிறது. அதனால், குடிநீர் இணைப்பு போன்ற அத்தியாவசியத் தேவைகளைப் பெறுவதற்கு எளிய முறையில் வழிமுறைகள் வழங்கப்பட வேண்டுமென நகராட்சி நிர்வாகத்தையும் மாவட்ட நிர்வாகத்தையும் கேட்டுக்கொள்கிறோம்” என்றார்.

கண்ணதாசன், குடியிருப்புவாசி

மேலும், இது குறித்து நம்முடன் பகிர்ந்து கொண்ட பெரம்பலூர் நகர்ப்புறப் பகுதியைச் சேர்ந்த கண்ணதாசன் என்பவர் கூறியதாவது, ''நான் பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையிலுள்ள பகுதியில் கடந்த ஆறு ஆண்டுகளாக வசித்து வருகிறேன். இதுவரை, எனக்கு குடிநீர் இணைப்பு பாதாள, சாக்கடை இணைப்புப் பெற முடியவில்லை. தொடர்ந்து ஆறு ஆண்டுகாலமாக, நகராட்சியில் மனு கொடுக்கப்பட்டாலும் விரிவுபடுத்தப்பட்ட பகுதி என்று கூறி, நகராட்சி நிர்வாகத்தால் குடிநீர் இணைப்பு வழங்குவதற்கு காலதாமதம் செய்கின்றனர்'' எனப் புகார் தெரிவித்தார்.

இதையும் படிங்க...மதுரையில் வெவ்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.