பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு பரவலாக நல்ல மழை பெய்தது. இதனிடையே பெரம்பலூர் நகர்ப்புற பகுதி கடைவீதியிலுள்ள பாதாள சாக்கடையிலிருந்து கழிவு நீர் வெளியேறிக் கொண்டிருந்தது.
இதனிடையே பெரம்பலூர் நகராட்சி ஆணையர் குமரி மன்னன் நேற்றிரவு 11.30 மணியளவில் இரவு நேரம் என்றும் பாராமல் நகராட்சி ஊழியர்கள் மூலம் கழிவு நீர் அடைப்பைச் சரி செய்து ஆய்வு மேற்கொண்டார். தற்போது சமூக வலைதளங்களில் நகராட்சி ஆணையர் ஆய்வு செய்யும் புகைப்படம் வைரலாகி வருகிறது.