ETV Bharat / state

'எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் 300 மாணவர்களுக்கு இலவச கல்வி' - srm students free scholarships

பெரம்பலூர்: எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டும் 300 மாணவர்களுக்கு இலவசமாக உயர் கல்வி அளிக்கப்படும் என பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் பாரிவேந்தர் அறிவித்துள்ளார்.

parivendhar
parivendhar
author img

By

Published : Sep 2, 2020, 4:07 PM IST

2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலின் போது, பெரம்பலூர் தொகுதியில் உள்ள 300 மாணவர்களுக்கு ஆண்டுதோறும் தகுதியின் அடிப்படையில் இலவச உயர் கல்வி வழங்குவதாக அந்த தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் பாரிவேந்தர் வாக்குறுதி அளித்தார்.

அதன்படி, 2019-20ஆம் ஆண்டுக்கான முதல் பிரிவில் (batch) மாணவர்கள் சேர்க்கப்பட்டு படித்து வருகின்றனர். இதனிடையே, இந்த ஆண்டும் (2020-21 ஆண்டு) பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 300 மாணவர்களுக்கு எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் இலவச உயர் கல்வி வழங்கப்படும் என பாரிவேந்தர் அறிவித்துள்ளார்.

இதற்கு ஆர்வமும் தகுதியும் உள்ள மாணவர்கள் பட்டப் படிப்பிற்கு விண்ணப்பித்து பயன் பெற www.ijkparty.org/www.srmist.edu.in என்ற வலைதளத்தில் ஆன்லைன் மூலம் செப்டம்பர் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தகுதி உள்ள 300 மாணவர்கள் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் கல்வி பயில்வர்.

இதையும் படிங்க: விவசாயம் மீது ஆர்வம் கொண்ட 4ஆம் வகுப்பு மாணவன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.