பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் மூலம் ரூபாய் இரண்டு லட்சம் மதிப்பில் இரண்டு வகுப்பறை கட்டடம் புதுப்பிக்கப்பட்டது.
இதனிடையே புதுப்பிக்கப்பட்ட இரண்டு வகுப்பறை கட்டடத்தை பெரம்பலூர் சட்டப்பேரவை உறுப்பினர் தமிழ்ச்செல்வன் திறந்துவைத்தார்.
இதனைத் தொடர்ந்து குத்துவிளக்கேற்றி சிறப்பித்தார். இந்த நிகழ்வில் பள்ளி ஆசிரியர் பெருமக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.