பெரம்பலூர் மாவட்டம் விஜயகோபாலபுரம் அருகே தனியார் தொழிற்சாலை இயங்கிவருகிறது. இங்கு பிகார், உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட வடமாநில தொழிலாளர்கள் விஜயகோபாலபுரம் என்னும் கிராமத்தில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். அவர்களில் பலர் மார்ச் மாதத்தில் சொந்த ஊருக்குச் சென்று திரும்பியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக 285 வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த பகுதிக்கு சுகாதாரத் துறையினர் சீல் வைத்தனர். அவர்களது கைகளில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதற்கான முத்திரையும் வைத்த அலுவலர்கள், இன்றிலிருந்து 28 நாட்கள் எக்காரணத்தை கொண்டும் வெளியேறக்கூடாது என்று உத்தரவிட்டனர்.
மேலும் வடமாநிலத் தொழிலாளர்கள் பணிபுரியும் தொழிற்சாலையில் விஜயகோபாலபுரத்தை சேர்ந்தவர்களும் பணிபுரிந்து வருவதால் அந்த கிராமமும் சீல் வைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வெளிநாடுகளிலிருந்து வந்த 410 பேர் தனிமை - திருவாரூர் மாவட்ட ஆட்சியர்!