பெரம்பலூர் அருகே உள்ள எசனை கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்றிணைந்து தற்காப்பு கலையான சிலம்பத்தை தங்களுடைய பகுதி சிறுவர்களுக்கு கற்று கொடுத்து வருகின்றனர்.
எசனை அரசுப் பள்ளி வளாகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக மாலை வேலையில் மாலை 6-9 மணிவரைக்கும் 8 முதல் 20 வயது வரையிலான சிறுவர்களுக்கு சிலம்ப பயிற்சி வழங்கப்பட்டது. அதனையடுத்து தாங்கள் இரண்டு மாதம் காலமாக கற்றுக் கொண்ட சிலம்ப கலையை சிறுவர்கள் பொதுமக்கள் முன்னிலையில் அரங்கேற்றமும் செய்தனர்.
இதனிடையே எசனை கிராமத்தில் சிலம்ப கலை பயிற்சி பெற்ற 50க்கும் மேற்பட்ட சிறுவர்களை பெரம்பலூர் சட்டப்பேரவை உறுப்பினர் தமிழ்ச்செல்வன் பொன்னாடை அணிவித்து பாராட்டினார். கரோனா ஊரடங்கு காலத்தில் தமிழ்நாட்டின் பாரம்பரியமிக்க சிலம்ப கலையை இந்த இளைஞர்கள் ஊக்குவித்து புத்துயிர் அளித்துள்ளனர்
இதையும் பாருங்க: ’ஊரடங்கில் தற்காப்பு கலையை மீட்டெடுக்கும் குஸ்தி வாத்தியார்’