பெரம்பலூர் மாவட்டம், நகராட்சி அலுவலக வளாகத்தில் பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீட்டுக் கடன் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில், பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், சுமார் ஆயிரம் பேர் பயன் பெறயிருக்கின்றனர். இதனிடையே பயனாளிகளில் பலர் வீடு கட்டுவதற்குத் தேவையான நிதி வசதி இல்லாத காரணத்தினால், அவர்களுக்கு தனியார் நிதி நிறுவனங்கள் மூலம் கடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதற்கு நிதி நிறுவனங்களும் இசைந்துள்ளன. இதனிடையே இத்திட்டத்தில் பயன் பெற்ற பயனாளிகள் இந்த முகாமில் கலந்துகொண்டு அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்து வீட்டுக்கடன் முகாமில் பயன்பெற்றனர். மேலும் இந்த நிகழ்வில் பல தனியார் நிதிநிறுவனங்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:'போராட்டங்களில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு மத்திய அரசின் விருது கிடையாது' - அரசு