பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சாந்தா அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். பின்னர் அதனை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் பெற்றுக் கொண்டார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. அதில், பெரம்பலூர் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 441 பேரும், பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 931 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 17 பேரும் என மொத்தம் இரண்டு லட்சத்து 87 ஆயிரத்து 389 வாக்காளர்கள் உள்ளனர்.
அதேபோல், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 633 பேரும், பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 88 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 11 பேரும் என மொத்தம் இரண்டு லட்சத்து 60 ஆயிரத்து 732 வாக்காளர்கள் உள்ளனர்.
ஆகமொத்தம் இரண்டு சட்டமன்ற தொகுதிகளையும் சேர்த்து ஆண் வாக்காளர்கள் இரண்டு லட்சத்து 70 ஆயிரத்து 74 பேரும், பெண் வாக்காளர்கள் இரண்டு லட்சத்து 78 ஆயிரத்து 19 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 28 பேரும் என மொத்தம் ஐந்து லட்சத்து 48 ஆயிரத்து 121 வாக்காளர்கள் உள்ளனர்.
இந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீட்டு நிகழ்வில் அனைத்து கட்சி பிரமுகர்கள், மாவட்ட அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: வேலூர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!