பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பெரம்பலூர் மாவட்டத்தில் பாடாலூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்திலும் வேப்பூர் ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனத்திலும் தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு(D.EI.Ed) முதலாமாண்டு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
இப்பயிற்சியில் சேர மேல்நிலை இரண்டாம் ஆண்டு(+2) தேர்வில் பொதுப்பிரிவினர் 50 விழுக்காடு மதிப்பெண்களும் (BC,BCM,MBC,SC,SCA,ST) பிரிவினர் 45 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் மேலும் 31.7.2020 அன்று 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். (SC,SCA,ST) மற்றும் மாற்றுத் திறனாளிகள் 35 வயதிற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்,
ஆதரவற்றோர், கணவனால் கைவிடப்பட்டோர், கைம்பெண்கள் 40 வயதிற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். இப்பயிற்சியில் சேர(OC,BC,MBC) பிரிவினர் ரூபாய் 500 கட்டணத்தையும் (SC,SCA,ST,PWD) பிரிவினர் ரூபாய் 250 கட்டணத் தொகையை செலுத்தி www.tnscert.org என்ற மின்னஞ்சல் முகவரியில் ஆகஸ்ட் 28.08.2020 மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.