ETV Bharat / state

பெரம்பலூர் மாவட்ட எஸ்பி பொறுப்பேற்பு - Perambalur district SP

பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் தங்கள் தேவைக்காகவும், சேவைக்காகவும் 24 மணிநேரமும் தொடர்பு கொள்ளலாம் என்று புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட காவல் கண்காணிப்பாளர் மணி தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்ட எஸ்பி பொறுப்பேற்பு
பெரம்பலூர் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளர் மணி
author img

By

Published : Jun 9, 2021, 7:03 PM IST

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த நிஷாபார்த்திபன், கடந்த சில நாள்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிபாளராக பணியிடை மாற்றம் செய்யப்பட்டார்.

புதிய காவல் கண்காணிப்பாளர்

சென்னை அமலாக்கத்துறை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த எஸ். மணி பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக மாற்றம் செய்யப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து அவர் இன்று (ஜூன் 9) காலை பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காவல் கண்காணிப்பாளர் மணி, " பொதுமக்கள், தங்கள் தேவைக்காவும், சேவைக்காவும் 24 மணி நேரமும் 6374111389 என்ற வாட்ஸ் அப் கைப்பேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.

சைபர் கிரைம்

மேலும், பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகள், கள்ளச்சாராயம், கஞ்சா விற்பனை, லாட்டரி விற்பனை, பற்றிய தகவல்களை தெரிவிக்கலாம்.

பொதுமக்கள் தெரிவிக்கும் தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும். மாவட்டத்தில் குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில் சிசிடிவி கேமராக்கள் அதிகளவில் வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு ஸ்பான்சர் கொடுப்பவர்கள் என்னை தொடர்பு கொள்ளலாம்.

மேலும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், இணையதள மோசடிகள் குறித்து விசாரணை நடத்த மாவட்ட காவல் துறையில் சைபர் கிரைம் என்ற பிரிவு செயல்படுகிறது. அதன் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுப்பிரமணியத்தை 9498143811 என்ற வாட்ஸ் அப் எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்" என மணி தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.