ETV Bharat / state

வைட்டமின் 'ஏ' திரவம் வழங்கும் சிறப்பு முகாம்: பெரம்பலூர் ஆட்சியர் தொடங்கிவைப்பு! - சிறப்பு மருத்துவ முகாம்

பெரம்பலூர்: குழந்தைகளுக்கு வைட்டமின் 'ஏ' திரவம் வழங்கும் சிறப்பு முகாமை நேற்று (ஆக. 25) பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா தொடங்கிவைத்தார்.

வைட்டமின் 'A' திரவம் வழங்கும் சிறப்பு முகாம்: பெரம்பலூர் ஆட்சியர் தொடங்கிவைப்பு!
Special Medical camp in perambalur
author img

By

Published : Aug 26, 2020, 1:19 AM IST

பெரம்பலூர் மாவட்டம் ஈச்சம்பட்டி கிராமத்தில் நடைபெற்றுவரும் வைட்டமின் 'ஏ' திரவம் வழங்கும் சிறப்பு முகாமில் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவத்தினை வழங்கி தொடங்கிவைத்தார். பின்னர், இது குறித்து அவர் கூறுகையில்,

"பெரம்பலூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக நடைபெற்றுவரும் இந்தச் சிறப்பு முகாம் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இதில், 6 மாதம் முதல் 5 வயது வரையிலான அனைத்து ஆண், பெண் குழந்தைகளுக்கு கண்பார்வைத் திறன், நிமோ நியா காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்ற நோய்த்தாக்கத்திலிருந்து எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஊட்டச்சத்துமிக்க வைட்டமின் ஏ திரவம் வழங்கப்பட்டுவருகிறது.

பெரம்பலூர் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் 38 ஆயிரத்து 339 குழந்தைகளுக்கும், நகர்ப்புறங்களில் ஐந்தாயிரத்து 130 குழந்தைகள் என மொத்தம் 43 ஆயிரத்து 469 குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

அனைத்து கிராமப்புறங்கள், நகர்ப்புறங்கள், பேருராட்சி, நகராட்சிப் பகுதிகளில் ஏற்கனவே தடுப்பூசி பணிகள் மேற்கொள்ளப்படும் மையங்களில் வைத்து வைட்டமின் ஏ திரவம் வழங்கப்படவுள்ளது.

எனவே 6 மாதம் முதல் 5 வயது வரையிலான அனைத்து குழந்தைகளையும் அவர்களது பெற்றோர் அருகிலுள்ள வைட்டமின் 'ஏ' திரவம் வழங்கும் மையத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும்" எனத் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.