ETV Bharat / state

பெரம்பலூரில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு! - வழக்கறிஞர் அருள்

பெரம்பலூர்: வழக்கறிஞர் அருள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, பெரம்பலூர் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

perambalur court
author img

By

Published : May 14, 2019, 11:52 PM IST

பெரம்பலூரில் வேலை வாங்கித் தருவதாக கூறி இளம்பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக அதிமுக எம்.எல்.ஏ மீது நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளரும், வழக்கறிஞருமான அருள் பாலியல் புகார் ஒன்றை தெரிவித்தார். மேலும், பாதிக்கப்பட்ட பெண் தன்னிடம் பேசியதாக ஆடியோ ஒன்றையும் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதையடுத்து, அவர் மீது அதிமுக அளித்த புகாரின் அடிப்படையில், வழக்கறிஞர் அருள் தீண்டாமை வன்கொடுமை சட்டம் மற்றும் தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இதனிடையே, கடந்த வாரம் வழக்கறிஞர் அருள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

பெரம்பலூரில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

இந்நிலையில், வழக்கறிஞர் அருள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கு எதிராக தமிழ்நாடு அரசை கண்டித்தும், குண்டர் சட்ட நடவடிக்கையை தமிழ்நாடு அரசு உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் பெரம்பலூர் வழக்கறிஞர் சங்கம், பெரம்பலர் பார் அசோஷியேஷன் சார்பில், வழக்றிஞர்கள் இன்று முதல் மே 17ஆம் தேதி வரை நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்.

மேலும், மேற்கண்ட கோரிக்கையை நிறைவேற்றவில்லை எனில் பல்வேறு போராட்டங்கள் நடைபெறும் எனவும் வழக்கறிஞர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Intro:பெரம்பலூரில் அதிமுக பிரமுகர் மீது பாலியல் புகார் தெரிவித்த வழக்கறிஞர் அருள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை கண்டித்து பெரம்பலூர் அட்வகேட் அசோசியேசன் மற்றும் பெரம்பலூர் பார் அசோசியேஷன் சங்கம் சார்பில் வழக்கறிஞர்கள் இன்று முதல் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்

Body:பெரம்பலூரில் வேலை வாங்கி தருவதாக கூறி இளம்பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக அதிமுக பிரமுகர் மீது நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளரும் வழக்கறிஞருமான அருள் பாலியல் புகார் ஒன்றை தெரிவித்தார் மேலும் பாதிக்கப்பட்ட பெண் தன்னிடம் பேசியதாக ஆடியோ ஒன்று வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் இதனிடையே வழக்கறிஞர் அருள் தீண்டாமை வன்கொடுமை சட்டம் மற்றும் தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார் இதனிடையே கடந்த வாரம் வழக்கறிஞர் அருள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது இந்நிலையில் வழக்கறிஞர் அருள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதை தமிழக அரசைக் கண்டித்தும் குண்டர் சட்ட நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி பெரம்பலூர் அட்வகேட் அசோசியேசன் மற்றும் பெரம்பலூர் பார் அசோசியேஷன் சங்கம் சார்பில் இன்று முதல் மே 17ஆம் தேதி வரை நீதிமன்ற புறக்கணிப்பில் வழக்கங்களில் ஈடுபட்டு வருகின்றனர்

Conclusion:மேலும் மேற்கண்ட கோரிக்கையை நிறைவேற்றவில்லை எனில் மேலும் பல்வேறு போராட்டங்கள் நடைபெறும் என போராட்டங்கள் நடைபெறும் என வழக்கறிஞர்கள் எச்சரித்தனர்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.