குன்னம் தொகுதி திமுக வேட்பாளர் சிவசங்கர் மற்றும் பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் பிரபாகரன் ஆகியோருக்கு ஆதரவு கேட்டு, திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி இன்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ”பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பு பொருளாதார மண்டலம், அரசு மருத்துவக்கல்லூரி ஆகிய திமுக கொண்டு வந்த திட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இது மக்களுக்கான ஆட்சியா? காழ்ப்புணர்ச்சியில் நடத்தப்படும் ஆட்சியா?
அதிமுகவிற்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால் எடப்பாடி பழனிசாமி மைக் பிடித்து பேசும் போதெல்லாம் சாபம் விட தொடங்கியுள்ளார். தமிழகத்தில் பாஜக செய்யும் ஒரே விசயம் பெரியார் சிலைகளை அவமதிப்பு மட்டும்தான். பெரியார் என்பது ஒரு கருத்தியல், பெரியார் என்பது ஒரு சித்தாந்தம், பெரியார் என்பது ஒரு புரட்சி. பதவி வெறியால் தமிழகத்தின் பெருமையை டெல்லியில் அடகு வைத்துவிட்டவர்களுக்கு இதெல்லாம் தெரியாது.
அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பதே இல்லை. குறிப்பாக, புகார் செய்ய வந்த பெண் போலீஸ் அதிகாரியையே தடுத்து நிறுத்தியது அதிமுக அரசு. திமுக ஆட்சிக்கு வந்ததும் பெண்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும்” என்றார்.
இதையும் படிங்க: எங்கள் திட்டங்களைவிட மக்களின் குறைகள் அதிகமாக உள்ளன - கமல்