விவசாயத்தை முதன்மையாக கொண்ட பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பாடாலூர், ஆலத்தூர், செட்டிகுளம், அம்மாபாளையம், சத்திரமனை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அதிக அளவு வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது.
இங்கு நடவுப் பணிக்காக விவசாயிகள் வெங்காயத்தை பட்டறை போட்டு பாதுகாத்து வருகின்றனர். இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் கிராமத்தில் ராஜேந்திரன் என்பவரது வயலில் நடவுப்பணிக்காக வைக்கப்பட்டிருந்த 12 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 200 கிலோ சின்ன வெங்காயத்தை நேற்றிரவு அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் இன்று (செப்.18) காலை ராஜேந்திரன் வயலில் வந்து பார்க்கும்பொழுது சின்ன வெங்காயம் திருடப்பட்டிருப்பது தெரியவந்ததையடுத்து பாடாலூர் காவல் துறையினரிடம் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.