பெரம்பலூர் அருகே உள்ள செஞ்சேரி கிராமத்தில் சுப்ரமணியன் என்பவரது வீட்டின் அருகே அவர்கள் வளர்த்த நாய் சந்தேகத்திற்குரிய பொருளைக் கடித்துள்ளது.
பின்னர் இன்று காலை பார்த்த போது, நாய் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். அத்தகவலின் பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று கைரேகை நிபுணர்களை வரவழைத்து, நாய் கடித்த சந்தேகத்திற்குரிய பொருள் நாட்டு வெடிகுண்டா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சந்தேகத்திற்குரிய பொருளைக் கடித்து நாய் இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: இன்று கரோனாவிலிருந்து தப்பித்த மதுரை!